ஓ அண்டாவா பாடலுக்கு அக்ஷய்குமாருடன் நடனமாடிய சமந்தா...வைரலாகும் வீடியோ...!
சமந்தாவின் முதல் ஐடம் சாங்கான ஓ சொல்றியா ஓ ஓ சொல்ல்றியா பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
மும்பை,
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் 'புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் , படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன.
குறிப்பாக சமந்தாவின் முதல் ஐடம் சாங்கான ஓ சொல்றியா ஓ ஓ சொல்ல்றியா பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தியேட்டரில் இவர் ஆடிய நடன அசைவுகள் ஒட்டுமொத்த திரையரங்கையும் கட்டிப்போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ, ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் பக்கத்தில் உலக அளவில் நம்பர் 1 என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்தநிலையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள ப்ரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். இதன் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.