கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஜூன் மாதம் வெளியாகும் - படக்குழு
'இந்தியன் 2' முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. எனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில்,படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி , 'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
Gear up for the comeback of Senapathy!INDIAN-2 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! #Indian2
— Lyca Productions (@LycaProductions) April 6, 2024
#Ulaganayagan @ikamalhaasan
@shankarshanmugh
@anirudhofficial
️ @dop_ravivarman
✂️️ @sreekar_prasad
️ @muthurajthangvl… pic.twitter.com/kwiKyAcNta