ஓராண்டு ஓய்வு நடிகை சமந்தாவுக்கு ரூ.12 கோடி இழப்பு


ஓராண்டு ஓய்வு நடிகை சமந்தாவுக்கு ரூ.12 கோடி இழப்பு
x
தினத்தந்தி 26 July 2023 10:45 AM GMT (Updated: 26 July 2023 10:45 AM GMT)

சமந்தா சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சாகுந்தலம் படம் படுதோல்வி அடைந்தது. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.

சமந்தா நடிப்பில் வருடத்திற்கு மூன்று படங்கள் வெளியாகி கொண்டு இருந்தன. கொரோனா தொற்று கால பாதிப்புக்கு பிறகு சமந்தாவின் சினிமா வாழ்க்கையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும் போது அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது சமந்தா ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும்.

எனவே ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.

சமந்தா ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதுதவிர பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதை வைத்து பார்த்தால் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இப்போது ஓராண்டு இடைவெளியால் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

சமந்தா தனது தோழி அனுஷா சுவாமியுடன் இந்தோனேசியாவுக்கு சென்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் இருவரும் தாங்கள் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story