'சீதாராமம்' திரைப்பட இயக்குனரின் படத்தில் இணையும் நித்தி அகர்வால்
இயக்குனர் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நித்தி அகர்வால் படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், அந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.
இந்நிலையில் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று ஆக்ஷன் படமாக உருவாகிறது. படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதுவரை மூன்று பாடல்கள் தயாராகிவுள்ளதாக ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஈஸ்வரன் மற்றும் கலகத்தலைவன் ஆகிய படங்களின் கதாநாயகி நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் பிரேக்கில் இருந்த நித்தி அகர்வால் மீண்டும் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.