ஆடம்பர சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்த பிரபல நடிகர்!


ஆடம்பர சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்த பிரபல நடிகர்!
x

நடிகர் ரன்வீர் சிங், தனது சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, ஆட்டோ ரிக்சாவை தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங், வெளியே சுற்றுப்பயணம் செல்ல தனது சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, ஆட்டோ ரிக்சாவை தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோ ரிக்சாவில் பயணிக்கும் வீடியோவை ரன்வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மும்பை மாநகரின் போக்குவரத்து நெரிசலில் வேடிக்கையாக அவரது ஆட்டோ சவாரியைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் தான், ரன்வீர் சிங் அவரது மனைவி நடிகை தீபிகா படுகோனேவின் பிறந்தநாளை இணைந்து கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.

அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக உள்ள ரன்வீர் சிங்குக்கு ஆடம்பர கார்கள் மீதும் விருப்பம் உண்டு. அவர் தனது கேரேஜில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்துள்ளார்.

அவரிடம் உலகின் முன்னணி நிறுவனங்களின் கார்களான "ஆஸ்டன் மார்ட்டின் ரேபிட்", "லம்போர்கினி உருஸ்" அவர் புதிதாக வாங்கிய ரூ.2.43 கோடி மதிப்புள்ள "மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்-600" என பல விலையுயர்ந்த கார்கள், நடிகருக்கு சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங் அடுத்ததாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பூஜா ஹெக்டேவுடன், ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் 'சர்க்கஸ்' படத்தில் நடிக்கிறார். ஆலியா பட் உடன் மீண்டும் "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானியில்" இணைந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை கரண் ஜோஹர் இயக்குகிறார்.

அவர் சமீபத்தில் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து "மேன் வெஸ் வைல்டு" நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.


Next Story