சலார் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்


சலார் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்
x

'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சலார் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், 'சலார் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸின், பங்காளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேபோல், இந்தியாவில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான சலார் திரைப்படத்தை தமிழ் நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. சலாரின் சினிமா காட்சிகளுக்கு உங்களைத் தயார்படுத்துங்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story