சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு


சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு
x

நடிகை சமந்தா பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இன்று 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் " மா இண்டி பங்காரம்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் 'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story