விவாகரத்துக்கு முன்பு வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கிய சமந்தா
ஐதராபாத்தில் விவாகரத்துக்கு முன்பு நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா அதிக விலை கொடுத்து வாங்கி தனது தாயாருடன் தற்போது குடியேறி இருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்தி படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் விவாகரத்துக்கு முன்பு நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா அதிக விலை கொடுத்து வாங்கி தனது தாயாருடன் தற்போது குடியேறி இருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகர் முரளி மோகன் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''திருமணமானதும் சமந்தாவும், நாக சைதன்யாவும் வீடு தேடினர். அப்போது எனது வீடு பிடித்துபோய் விலைக்கு வாங்கி குடியேறினார். அங்கிருந்தபடியே நாக சைதன்யா இன்னொரு புதிய வீட்டை கட்டி வந்தார்.
இந்த நிலையில் என்னிடம் இருந்து வாங்கி அவர்கள் குடியிருந்த வீட்டை இன்னொருவருக்கு விற்றுவிட்டனர். விவாகரத்துக்கு பிறகு நாகசைதன்யா அவர் கட்டிய புதிய வீட்டுக்கு சென்றுவிட்டார். சமந்தா என்னை அணுகி அவர்கள் விற்றுவிட்ட விவாகரத்துக்கு முன்பு வாழ்ந்த வீட்டை தனக்கு வாங்கி தரும்படி கூறினார். இதையடுத்து அந்த வீட்டை விலைக்கு வாங்கியவரிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். அவர் வாங்கியதைவிட அதிக பணம் கொடுத்து அந்த வீட்டை சமந்தா மீண்டும் சொந்தமாக்கி கொண்டார்" என்றார்.