கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!


கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
x

நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்திற்காக உடல் எடையை குறைத்து கெட்டப்பையே மாற்றி உள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். முதல் முறையாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்திற்காக உடல் எடையை குறைத்து கெட்டப்பையே மாற்றி உள்ளார். அவர் இன்று தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'கண்ணாடியை பாருங்கள்.. அதில் தெரிபவர்தான் உங்கள் போட்டியாளர்' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Next Story