நடிகர் கார்த்தி பாடிய பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த புதிய அப்டேட்
சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார்
சென்னை,
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது..
இந்நிலையில், இப்படத்தின் புது அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
The first song of #sardar will be sung by our #vandhiyathevan @karthi_offl … it's an ode to our classical theatre performances … the song is a rural folk track named #ஏறுமயிலேறி #yerumayileri . @psmithran #princepictures @dhilipaction @geroge_dop @AntonyLRuben .. #yugabarathy pic.twitter.com/RvYfQQ4kAs
— G.V.Prakash Kumar (@gvprakash) October 7, 2022