தமிழும் மாறவில்லை, நாடும் மாறவில்லை - வைரமுத்து டுவீட்


தமிழும் மாறவில்லை, நாடும் மாறவில்லை - வைரமுத்து டுவீட்
x

தமிழும் மாறவில்லை; நாடும் மாறவில்லை என்பது தேசியத் துயரம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,

கலையின் சமூகக் கடமை

என்ன என்று கேட்பார்க்கு

இந்தப் பாடலே பதிலாகலாம்

38 ஆண்டுகளுக்கு முன்

நான் எழுதிய

தமிழும் மாறவில்லை;

நாடும் மாறவில்லை என்பது

தேசியத் துயரம்

என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் இவர் எழுதிய காந்தி தேசமே பாடலை இணைத்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Next Story