டீச்சராக மாறிய நடிகை நித்யா மேனன்...!
அரசு தொடக்க பள்ளியில் நடிகை நித்யா மேனன் மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடம் எடுத்து அசத்தினார்.
திருப்பதி,
180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில்,
நடிகை நித்யா மேனன், திருப்பதி அருகில் உள்ள வரதயா பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமத்துக்கு அவ்வப்போது வருவது வழக்கம்.
சமீபத்தில் அந்த ஆசிரமத்திற்கு வந்த அவர், சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின் அதன் அருகிலுள்ள பழங்குடியினர் கிராமத்துக்குச்சென்றார்.
அங்கு அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் உரையாடிய அவர், ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story