சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்தின் டீசர் வெளியானது..!


சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்தின் டீசர் வெளியானது..!
x

சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சத்யராஜ் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் `வெப்பன்'. இதில் ராஜிவ் பிள்ளை, ராஜிவ் மேனன், வசந்த் ரவி, கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'வெள்ளை ரோஜா' என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமானவர்.

மில்லியன் ஸ்டூடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹியூமன் கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story