'ரிபெல்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு


ரிபெல் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
x
தினத்தந்தி 30 Nov 2023 2:29 PM GMT (Updated: 30 Nov 2023 2:29 PM GMT)

'ரிபெல்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை,

அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரிபெல்' (Rebel). இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'ரிபெல்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'ரிபெல்' படத்தின் படத்தின் முதல் பாடலான 'அழகான சதிகாரி' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story