விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமானின் மகன்


விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமானின் மகன்
x
தினத்தந்தி 6 March 2023 11:31 AM IST (Updated: 6 March 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மும்பை

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார். இவர் பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த பாடல் படப்பிடிப்பின் போது ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பது, "மேடையின் நடுவில் நின்றுகொண்டு பாடல் பாடி கொண்டிருந்தோம். பாடல் பாடுவதில் மூழ்கி இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நானும் என் குழுவும் நூலிழையில் உயிர் தப்பினோம். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்று பாதுகாப்பாக, உயிர் உடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட கிரேன் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story