புதிய அறிவிப்பை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு... பொங்கலன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!


புதிய அறிவிப்பை வெளியிட்ட லால் சலாம் படக்குழு... பொங்கலன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!
x

ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் அடுத்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி லால் சலாம் படத்தின் இரண்டாவது பாடல் பொங்கலன்று (ஜனவரி 15) வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story