'டைகர் 3' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு


டைகர் 3 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

'டைகர் 3' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'டைகர் 3' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 16-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.


Next Story