பெண்களுக்கு எதிரான அத்துமீறல்: பிரியங்கா மோகன் கொந்தளிப்பு


பெண்களுக்கு எதிரான அத்துமீறல்: பிரியங்கா மோகன் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2024 11:00 PM GMT (Updated: 6 Jan 2024 11:00 PM GMT)

பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா மோகன், ஆண், பெண் இருவருக்கும் சம பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் முன்னோட்ட (பிரீ ரிலீஸ்) விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம் ஒரு வாலிபர் அத்துமீறியதும், அவரை பிடித்து ஐஸ்வர்யா தர்ம அடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்கு நடிகை பிரியங்கா மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். அனைவரையும் மனித உயிர்களாக முதலில் மதிக்க வேண்டும். நமது வீட்டிலும் அம்மா, சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் சும்மா இருப்போமா? ஆனால், நாம் மட்டும் இன்னொரு பெண்ணுக்கு தப்பான ஒரு விஷயத்தை செய்யலாமா? அது சரியாகுமா? என்று கொந்தளித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் துப்பாக்கி ஏந்தி நடித்த காட்சி குறித்தும் பிரியங்கா மோகன் கூறினார். நிஜ துப்பாக்கி பயன்படுத்தினாலும், புல்லட் டம்மி தான். துப்பாக்கி பிடித்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்' என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.


Next Story