என்னப்பா சொல்றீங்க...! ரஞ்சிதமே பாடலுக்கு கர்ப்பிணி வயிற்றிலுள்ள வாரிசும் கூட நடனம்...! தமன் நெகிழ்ச்சி
ரஞ்சிதமே பாடல் வீடியோ யூடியூபில் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
சென்னை
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியாது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. குடும்ப பொழுது போக்காக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
ரஞ்சிதமே பாடல் வீடியோ யூடியூபில் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் அதிரடியாக நடனமாடியுள்ளார் விஜய். இந்தப் பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள், குழந்தைகள்கூட நடனமாடுகிறார்கள். குழந்தைகள் நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்து, "வாரிசு பிளாக் பஸ்டர்" என பதிவிட்டுள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. தெலுங்கிலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் வாரிசு மற்றும் வாரிசுடு உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகி உள்ளது.
இந்த நிலையில் கேரளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ரஞ்சிதமே பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சிசு வயிற்றில் அசைவதாக கூறியுள்ளார். இதனைப் பகிர்ந்த தமன், "இது ஒரு தெய்வீக உணர்ச்சி. இந்த நாளை எனதாக்கியது" என பதிவிட்டுள்ளார்.