'எனது புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவீர்கள்'-நடிகை ராஷ்மி கவுதம்


எனது புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவீர்கள்-நடிகை ராஷ்மி கவுதம்
x

எனக்கு விளம்பரம் தேட இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மி கவுதம் கூறினார்.

சென்னை,

தமிழில் 'கண்டேன்' படத்தில் நடித்த ராஷ்மி கவுதம் தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் உணவு டெலிவரி நிறுவனம் சைவ உணவை டெலிவரி செய்யும்போது பச்சை நிறத்தில் டீசர்ட் அணியும்படி தனது ஊழியர்களை அறிவுறுத்தியது சர்ச்சையானது.

இதன் மூலம் அசைவ உணவு சாப்பிடுபவர்களை அவமதிப்பதாக சிலர் விமர்சித்தனர். இதையடுத்து அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஷ்மி கவுதம் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பச்சை டீசர்ட் அணிந்து உணவை டெலிவரி செய்வதில் என்ன தவறு. அப்படி செய்வதன் மூலம் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மனோபாவம் எதற்காக பாதிக்கப்பட வேண்டும்'' என்று பதிவிட்டார். இதையடுத்து ராஷ்மி கவுதம் சமூக வலைதளத்தில் தன்னை பிரபலப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ள இப்படி கருத்து தெரிவித்து இருப்பதாக ரசிகர்கள் பலர் கண்டித்தனர்.

இதனால் காட்டமான ராஷ்மி கவுதம், "எனக்கு விளம்பரம் தேட இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. எனது ஒரு படத்தை பகிர்ந்தாலே அதை ஜூம் செய்து பார்த்து எப்படி ஜொள்ளு விடுவீர்கள் என்று எனக்கு தெரியும். அதற்கு தேவையில்லாத கவனம் கொடுப்பீர்கள்'' என்று சொல்லி தனது கவர்ச்சி புகைப்படத்தையும் வலைதளத்தில் பகிர்ந்தார். இது பரபரப்பானது.


Next Story