தனுஷ் நடிக்கும் படம் முடிவடையும் நிலையில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’


தனுஷ் நடிக்கும் படம் முடிவடையும் நிலையில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’
x
தினத்தந்தி 17 Jan 2017 10:07 AM GMT (Updated: 17 Jan 2017 10:07 AM GMT)

தனுஷ் நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இந்த படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தனுஷ் இப்போது, ‘பவர் பாண்டி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பணிகள் முடிவடைந்ததும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அவருடன் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில், ராணா நடிக்கிறார். டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் டீசர், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது.

Next Story