உயிர் தப்பிய டாம் குரூஸ்..!


உயிர் தப்பிய டாம் குரூஸ்..!
x
தினத்தந்தி 19 Aug 2017 7:28 AM GMT (Updated: 2017-08-19T12:58:17+05:30)

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் ‘ஆக்‌ஷன் கிங்’ டாம் குரூஸ் தற்போது ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஆறாவது பாகத்தில் நடித்து வருகிறார்.

லகப்புகழ் பெற்ற ஹாலிவுட் ‘ஆக்‌ஷன் கிங்’ டாம் குரூஸ் தற்போது ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஆறாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு சவாலான இடத்தில் அந்தரத்தில் தாண்டும் காட்சியில் டாம் குரூஸ் நடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயரமான ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவும்போது தடுமாறி கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தின் சுவரை பிடித்து கொண்டதால் உயிர் தப்பியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் லேசான காயம் அடைந்ததால் தற்போது சிகிச்சை பெற்று வரும் டாம் குரூஸ் விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Next Story