சினிமா துளிகள்

இந்தியன்-2 கதை தயார் கமல்ஹாசன் + "||" + Indian -2 Story ready Kamal Haasan

இந்தியன்-2 கதை தயார் கமல்ஹாசன்

இந்தியன்-2 கதை தயார் கமல்ஹாசன்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் வசூல் குவித்தது.
குறிப்பாக கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் 2-ம் பாகம் எடுக்கப்போவதாக உறுதி படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் ஒவ்வொரு படத்தை உருவாக்கும்போதும் அதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதன்படி தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 தயாராகி வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு அதற்கான கரு என் மனதில் உருவாகி அதற்கான திரைக்கதையை தயார் செய்து வந்தேன். தற்போது அது இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இந்தியன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்றார். இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்கின்றனர்.