சினிமா துளிகள்

சிம்புவும், ஓவியாவும்...! + "||" + Simbu and Oviya ...!

சிம்புவும், ஓவியாவும்...!

சிம்புவும், ஓவியாவும்...!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின், ஓவியா மிக பிரபலமாகி விட்டார். அவருக்கும், சிம்புவுக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக வதந்திகள் பரவின.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின், ஓவியா மிக பிரபலமாகி விட்டார். அவருக்கும், சிம்புவுக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக வதந்திகள் பரவின. ‘‘இது, வெறும் வதந்திதான். உண்மை அல்ல’’ என்று சிம்பு மறுப்பு தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்த ஓவியா, இப்போது வாய் திறந்து இருக்கிறார். ‘‘ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் இருவரையும் நிம்மதியாக வாழ விடுங்கள். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்று அவர் கூறினார்!