சினிமா துளிகள்

டைரக்டர்கள் எடுத்த ரகசிய முடிவு! + "||" + Secret decision taken by the directors!

டைரக்டர்கள் எடுத்த ரகசிய முடிவு!

டைரக்டர்கள் எடுத்த ரகசிய முடிவு!
மூன்றெழுத்து படத்தின் மூலம் பிரபலமான ‘பாலிவுட்’ நடிகை அவர். தென்னிந்திய டைரக்டர்கள் மீது பாலியல் புகார் சொல்லி, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தென்னிந்திய டைரக்டர்கள் அனைவரும் அந்த நடிகை மீது கோபமாக இருக்கிறார்கள். அவருக்கு இனிமேல் யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று டைரக்டர்கள் அனைவரும் ஒருமனதாக ரகசிய முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அந்த நடிகை தன்னை நீச்சல் உடையில் படம் எடுத்து எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும், டைரக்டர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பலன் கிடைக்குமா? என்று வீட்டு வாசல் மீது விழிகளை வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்!