சினிமா துளிகள்

முதல்பட நாயகனுடன் + "||" + With the first hero

முதல்பட நாயகனுடன்

முதல்பட நாயகனுடன்
தேஜா இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘லட்சுமி கல்யாணம்’ திரைப்படம் மூலமாக தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார் காஜல் அகர்வால்.
லட்சுமி கல்யாணம் படத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு, தன்னுடைய முதல்பட கதாநாயகனான கல்யாண் ராமுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் ‘எம்.எல்.ஏ.’

‘நான் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்தைப் போலவே, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் காஜல் அகர்வால்.