சினிமா துளிகள்

கிராமத்துக்கு குடிபெயர்ந்த பிரபல நாயகன்! + "||" + Famous hero who migrated to the village!

கிராமத்துக்கு குடிபெயர்ந்த பிரபல நாயகன்!

கிராமத்துக்கு குடிபெயர்ந்த பிரபல நாயகன்!
அந்த பிரபல நாயகன் இதுவரை நீலாங்கரை அருகில் வசித்து வந்தார். அரண்மனை போன்ற சொந்த வீடு, அது. கடற்கரையை ஓட்டி, அந்த பங்களா அமைந்து இருக்கிறது.
வாஸ்து சாஸ்திரப்படி, பங்களாவில் சில மாற்றங்களை செய்தால், தொழில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று யாரோ ஆரூடம் சொல்லியிருப்பார்கள் போலும்.

உடனே அந்த பங்களாவை மாற்றி அமைக்க முடிவு செய்தார், நடிகர். மாற்றங்களுக்காக பக்கத்தில் உள்ள கிராமத்துக்கு குடி பெயர்ந்தார். சொந்த பங்களாவை மாற்றி அமைக்கும் வரை, நடிகர் கிராமத்திலேயே தங்கியிருப்பாராம்!