சினிமா துளிகள்

அம்மாவாக நடிக்க தயங்கிய நாயகிகள் + "||" + Hesitates Heroines

அம்மாவாக நடிக்க தயங்கிய நாயகிகள்

அம்மாவாக நடிக்க தயங்கிய நாயகிகள்
அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி டைரக்‌ஷனில் தயாரான ‘ஒரு குப்பை கதை,’ சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு குப்பை கதை பற்றி டைரக்டர் காளி ரங்கசாமி கூறியதாவது:-

‘‘நான் உருவாக்கி வைத்திருந்த அப்பாவியான கணவன் கதாபாத்திரத்துக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் உயிர் கொடுத்திருக்கிறார். அவருடைய உயரத்துக்கு கதாநாயகி தேடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. கதாநாயகியின் கதாபாத்திரம் பற்றி சொன்னதும், எல்லா கதாநாயகிகளும் நடிக்க தயங்கினார்கள். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவர்கள் விரும்பவில்லை.

கதையை கேட்டதும் சம்மதம் சொன்னவர், மனிஷா யாதவ் மட்டும்தான். கதையை தனது தோளில் சுமந்து செல்லக்கூடிய கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார், மனிஷா யாதவ்!’’