சினிமா துளிகள்

தாத்தாவின் கதாபாத்திரம் + "||" + Grandpa's character

தாத்தாவின் கதாபாத்திரம்

தாத்தாவின் கதாபாத்திரம்
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்தவர் என்.டி.ஆர். இவரது வாழ்க்கை வரலாறு இப்போது படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
என்.டி.ஆர். வேடத்தில் அவரது மகன் பால கிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தை கிரிஷ் இயக்குகிறார். படத்தின் தலைப்பும் ‘என்.டி.ஆர்.’ என்றே வைக்கப்பட்டுள்ளது.

என்.டி.ஆரும், நாகேஸ்வரராவும் சமகால நடிகர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இதனால் ‘என்.டி.ஆர்.’ படத்தில் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது பேரனான நாகசைதன்யாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகசைதன்யா, ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. எடை குறைக்கும் என்.டி.ஆர்.
சுமார் 10 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.