சினிமா துளிகள்

டிரைலரை வெளியிடும் மம்முட்டி + "||" + Mammootty publishes trailer

டிரைலரை வெளியிடும் மம்முட்டி

டிரைலரை வெளியிடும் மம்முட்டி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஒடியன்’ படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் பெரும்பாலும் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், நான்கு அல்லது ஐந்து மாதத்தில் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வந்து விடும். ஆனால் மலையாள உச்ச நடிகரான மோகன்லால் நடித்து வரும் ‘ஒடியன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக தனது உடல் எடையில் 18 கிலோ வரை குறைத்து, இளமைத் தோற்றத்திற்கு மாறியிருந்தார் மோகன்லால்.

இந்தப் படம் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பற்றவைத்திருக்கிறது. அதற்கு அவ்வப்போது வெளியாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்களும் காரணமாக அமைந்துள்ளன. சமீபத்தில் இரண்டு எருதுகளுக்கு இடையே மோகன்லால் ஓடிவருவது போல் வெளியான போஸ்டரும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். பிளாக் மேஜிசியனாக மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியார் போன்ற பிரபல நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ‘ஒடியன்’ படத்தில் மம்முட்டியும் இணைந்திருக்கிறார். எப்படி என்கிறீர்களா?

அக்டோபர் 11-ந் தேதி திரைக்கு வர இருக்கும் ‘ஒடியன்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்தப் படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இந்த டிரைலரை வெளியிடுபவர், மலையாள சினிமாவின் மற்றொரு உச்ச நடிகரும், மோகன்லாலின் ஆத்மார்த்த நண்பருமான மம்முட்டி.