சினிமா துளிகள்

அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா! + "||" + Adwarva With SriDivya!

அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா!

அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா!
‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்து அதர்வா நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருக்கிறார்.
சில பல கதாநாயகிகளின் போட்டிக்கு மத்தியில், இந்த படத்தை ஸ்ரீதிவ்யா கைப்பற்றி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்க, பர்னேஷ் டைரக்டு செய்திருக்கிறார். ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.


‘அஞ்சாதே’ பட புகழ் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். ஜஸ்டிஸ் பிரபாகர் இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவில், பர்னேஷ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். இவர் கூறும்போது, “இந்த படம், ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் மர்மமான சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை. அதனால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் காதல் இருக்கிறது. பகை இருக்கிறது. வன்மம் இருக்கிறது. தோழமை இருக்கிறது. இந்த படம், அத்தனை உணர்வுகளும் ஒருங்கிணைந்த படமாக இருக்கும்” என்கிறார்!


தொடர்புடைய செய்திகள்

1. அதர்வாவின் `குருதி ஆட்டம்'
`குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.
2. 100-வது படத்தில், அதர்வா!
அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `100-வது படம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
3. ``பூமராங் படப்பிடிப்பை 45 நாட்களில் முடித்து விட்டோம்'' -டைரக்டர் ஆர்.கண்ணன்
அதர்வா-மேகா ஆகாஷ் ஜோடியுடன் வளர்ந்து வரும் படம், `பூமராங்.' இதில், இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார்.