சினிமா துளிகள்

மீண்டும் மலையாளத்தில், விக்ரம்! + "||" + Again in malayalam, Vikram!

மீண்டும் மலையாளத்தில், விக்ரம்!

மீண்டும் மலையாளத்தில், விக்ரம்!
விக்ரம் ஆரம்ப காலத்தில், பல மலையாள படங்களில் நடித்தார். ‘சேது’ படத்துக்கு முன்பு அவருக்கு மலையாள பட உலகம்தான் கைகொடுத்தது.
‘சேது’ படத்தின் மூலம் அவர் நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பின், தமிழ் படங்களில் ‘பிஸி’யாகி விட்டார். மலையாள படங்களுக்கு அவரால் ‘கால்ஷீட்’ கொடுக்க முடியவில்லை.

18 வருடங்கள் கழித்து அவர் தற்போது ஒரு மலையாள படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். மலையாள பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான அன்வர் ரஷீத் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடையே நிறைய இடைவெளி எடுத்துக் கொள்வார். 5 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘உஸ்தாத் ஓட்டல்’ என்ற மலையாள படத்தை இயக்கியவர், இவர்தான். அதன் பிறகு அன்வர் ரஷீத் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில், விக்ரம் நடிக்கிறார்.


இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யார்? என்று முடிவாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சரித்திர கதையில் விக்ரம்?
விக்ரம் நடிப்பில் இந்த வருடம் ஸ்கெட்ச், சாமி–2 ஆகிய படங்கள் வந்தன.
2. மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்
நடிகர் விக்ரம் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தை பாலா இயக்கி உள்ளார். கதாநாயகியாக மேகா நடித்துள்ளார்.
3. சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் -நடிகர் விக்ரம்
சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என குறும்படம் வெளியிடும் விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.
4. நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதம்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்து உள்ளன.