சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்தினார்! + "||" + raised the salary!

சம்பளத்தை உயர்த்தினார்!

சம்பளத்தை உயர்த்தினார்!
‘அட்டகத்தி’ நாயகன் சம்பளத்தை உயர்த்தி விட்டார்.
‘அட்டகத்தி’ நாயகன் அதிக படங்களில் நடிப்பதில்லை. அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசை இல்லை. கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும், அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன என்றும் இரண்டு விதமாக பேசப்படுகிறது.

அவர் இதுவரை ரூ.90 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். அதற்கு குறைந்து அவர் நடிப்பதில்லை. இந்த நிலையில் அவர் நடித்து சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்தது. அந்த படம் வெற்றிகரமாக ஓடுவதாக கூறி, சம்பளத்தை மேலும் ரூ.10 லட்சம் உயர்த்தி விட்டார். இப்போது அவர் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறார்!