சினிமா துளிகள்

கொண்டாட்டத்தை தவிர்த்த ‘யஷ்’ + "||" + 'Yash' to avoid celebration

கொண்டாட்டத்தை தவிர்த்த ‘யஷ்’

கொண்டாட்டத்தை தவிர்த்த ‘யஷ்’
கன்னட நடிகரான யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கே.ஜி.எப்’ படத்தின் முதல் பாகம் வெளியானது.
 அனைத்து மொழிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம் யஷ் நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. இதனால் கே.ஜி.எப். படத்தில் வெற்றி விழாவையும், பிறந்தநாள் விழாவையும் ஒரே மேடையில் கொண்டாட, நடிகர் யஷின் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் யஷ், இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. “கன்னட சினிமாவில் பிரபல நடிகரான அம்பரீஷ் மறைந்த நிகழ்வு என்னுடைய நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை. எனவே எந்த கொண்டாட்டத்தையும் நாம் இப்போது செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறாராம்.