சினிமா துளிகள்

`நேத்ரா' படத்துக்காக வினய்-தமன் உயிரை பணயம் வைத்து நடித்த கார் துரத்தல் காட்சி + "||" + Vinay-Daman has been starring in life Car chase scene For Nethra's film

`நேத்ரா' படத்துக்காக வினய்-தமன் உயிரை பணயம் வைத்து நடித்த கார் துரத்தல் காட்சி

`நேத்ரா' படத்துக்காக வினய்-தமன் உயிரை பணயம் வைத்து நடித்த கார் துரத்தல் காட்சி
கனடாவில் உள்ள ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் டைரக்டர் ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்து, டைரக்டு செய்துள்ள படம், `நேத்ரா.'
வினய்-தமன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, ரித்விகா-சுபிக்ஷா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி, இமான் அண்ணாச்சி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், பபிதா ஆகியோரும், கனடாவின் முன்னணி நடிகர்-நடிகைகளும் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

கதாநாயகர்கள் வினய், தமன் ஆகிய இருவரையும் 40-க்கும் மேற்பட்ட கார்கள் துரத்தும் காட்சியில், இருவரும் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளனர். படத்தின் உச்சக்கட்டத்தில் வரும் இந்த காட்சி, படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடும் என்று டைரக்டர்-தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் கூறுகிறார்.

ரோபோ சங்கர் 5 வேடங்களிலும், மொட்டை ராஜேந்திரன் 6 வேடங்களிலும், இமான் அண்ணாச்சி 7 வேடங்களிலும் நடித்து, நகைச்சுவை காட்சிகளில் கலக்கி இருக்கிறார்கள். அஜயன்பாலா வசனம் எழுதியிருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்புகளையும் ஏ.வெங்கடேஷ் எற்று இருக்கிறார். நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் தியாகராஜன் 700-க்கும் அதிகமான தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார். படம், இம்மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.