சினிமா துளிகள்

‘புதுப்பேட்டை-2’ வருமா, வராதா? + "||" + Pudupettai 2

‘புதுப்பேட்டை-2’ வருமா, வராதா?

‘புதுப்பேட்டை-2’ வருமா, வராதா?
தனுஷ் ரசிகர்கள் தனுசை நேரில் சந்திக்கும்போதெல்லாம், ‘புதுப்பேட்டை-2’ வருமா, வராதா?’’ என்று கேட்டு வந்தார்கள்.
தனுஷ் நடித்து அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ படம் நூறு நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தனுசை நேரில் சந்திக்கும்போதெல்லாம், ‘புதுப்பேட்டை-2’ வருமா, வராதா?’’ என்று கேட்டு வந்தார்கள்.

அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்ட தனுஷ், இரண்டாம் பாகத்துக்காக கதை எழுதி வருகிறார். இதையடுத்து அவர் திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கிறார். இந்த வேலை முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ‘புதுப்பேட்டை’ படம், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில், மறு வெளியீடு செய்யப்பட்டது. அந்த படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதை நேரில் பார்த்த பின்பே ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற நம்பிக்கை தனுசுக்கு வந்து இருக்கிறதாம்.

அந்த படத்தின் கதையில் சிறிது மாற்றம் செய்து, ‘புதுப்பேட்டை-2’ உருவாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் நடித்த ‘கொக்கி குமார்’ கதாபாத்திரத்திலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.