சினிமா துளிகள்

ஜோதிடர் சொன்ன பரபரப்பு தகவல் + "||" + Astronomical information from the astrologer

ஜோதிடர் சொன்ன பரபரப்பு தகவல்

ஜோதிடர் சொன்ன பரபரப்பு தகவல்
நம்பர்-1 நடிகைக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம்

வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவார். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறார். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்தார். “திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“இப்போது திருமணம் செய்து கொண்டால், ‘மார்க்கெட்’ போய்விடும்” என்று சொன்ன ஜோதிடர், நடிகைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலையும் சொன்னாராம். “உனக்கு அரசியல் வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. இன்னும் 5 வருடத்தில், பெரிய பதவி உன்னை தேடி வரும். இதை யாராலும் தடுக்க முடியாது” என்றாராம். நடிகையின் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இப்போதே தெரிகிறதாம்!