சினிமா துளிகள்

ராஜமவுலி படத்தில் 3 இந்தி நடிகர்கள்! + "||" + In Rajamouli movie 3 Hindi actors

ராஜமவுலி படத்தில் 3 இந்தி நடிகர்கள்!

ராஜமவுலி படத்தில் 3 இந்தி நடிகர்கள்!
`பாகுபலி' டைரக்டர் ராஜமவுலி இயக்கும் படத்தில் 3 இந்தி நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியவர், டைரக்டர் ராஜமவுலி. அந்த படத்தின் இரண்டாம் பாகம், `பாகுபலி-2' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் ராஜமவுலியின் அந்தஸ்து மேலும் உயர்ந்தது.

இப்போது அவர், ``ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், `ஆர் ஆர் ஆர்' படத்தில் சஞ்சய்தத், வருண் தவான் ஆகிய 2 இந்தி நடிகர்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது!