சினிமா துளிகள்

அஜித்குமாரின் 60-வது படம்! + "||" + Ajith Kumar's 60th film!

அஜித்குமாரின் 60-வது படம்!

அஜித்குமாரின் 60-வது படம்!
அஜித்குமார் இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 59-வது படம், `நேர்கொண்ட பார்வை.' இந்த படத்தை வினோத் இயக்கியிருக் கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
அமிதாப்பச்சன் நடித்து வட இந்தியாவில் வெற்றி பெற்ற `பிங்க்' என்ற இந்தி படத்தின் தழுவல், இது. இந்தி படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடி இல்லை. தமிழ் படத்தில், அஜித்குமாருக்கு ஜோடி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடித்து இருக்கிறார். இதுபோக தமிழ் படத்துக்காக ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்.

40 நாட்களில் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார், டைரக்டர் வினோத். எனவே அவருடைய டைரக்‌ஷனில், அஜித் மேலும் ஒரு படத்தில் நடிப்பார் என்று பேச்சு அடிபடு கிறது!


அதிகம் வாசிக்கப்பட்டவை