சினிமா துளிகள்

பாடகராகவும், நடிகராகவும்...! + "||" + He has played more than 200 songs and has an important place for fans

பாடகராகவும், நடிகராகவும்...!

பாடகராகவும், நடிகராகவும்...!
200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்களிடம் முக்கிய இடம் பிடித்துள்ளார்
‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் பாடகராக அறிமுகமான வேல்முருகன், ‘நாடோடிகள்,’ ‘ஆடுகளம்,’ ‘காஞ்சனா,’ ‘கொம்பன்,’ ‘கழுகு,’ ‘செம’ உள்ளிட்ட பல படங்களில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அதன் பிறகு அவர் பாடிய பாடல்களில், அவரே நடித்தார். அப்படி அவர் பாடி நடித்த முதல் படம், ‘பழைய வண்ணாரப்பேட்டை.’ தொடர்ந்து அவர் பாடியும் நடித்தும் வருகிறார். ‘வேறு எங்கும் எங்களுக்கு கிளைகள் கிடையாது’ படத்தில் கவுண்டமணியுடன் நடித்த அவர் இப்போது யோகி பாபுவுடன், ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பாடகராகவும், நடிகராகவும் என் திரையுலக பயணம் தொடரும் என்று வேல்முருகன் கூறினார்.