சினிமா துளிகள்

நயன்தாரா பாராட்டு பெற்ற இசையமைப்பாளர்! + "||" + Nayanthara acclaimed composer!

நயன்தாரா பாராட்டு பெற்ற இசையமைப்பாளர்!

நயன்தாரா பாராட்டு பெற்ற இசையமைப்பாளர்!
நயன்தாரா பேய் வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற ‘மாயா’ படத்துக்கு இசையமைத்தவர், ரான் ஈத்தன் யோகன். அந்த படத்தின் திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலூட்டியது, இவரது இசை. இவருடைய பின்னணி இசையை நயன்தாரா மிகவும் பாராட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆனது எப்படி? என்பது பற்றியும், தொடர்ந்து இசையமைப்பது பற்றியும் இவர் கூறுகிறார்:-

‘‘நான் இசை குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது தாத்தா சேவியர், அப்பா ராஜன் ஆகிய இருவரும் முன்னணி இசையமைப்பாளர்கள் குழுவில் வயலின், கிடார் வாசித்துள்ளனர். நான் லண்டன் இசை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளேன்.

‘மாயா’ படத்துக்குப்பின், தொடர்ந்து திகில் படங் களுக்கு இசையமைக்கவே வாய்ப்புகள் வருகின்றன. ஒரே வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பவில்லை. எல்லா வகையான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறேன்.’’