சினிமா துளிகள்

அருண் விஜய் காயம் + "||" + Arun Vijay injured

அருண் விஜய் காயம்

அருண் விஜய் காயம்
நடிகர் அருண் விஜய் சண்டை காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார்.
அருண் விஜய் இப்போது, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்யும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, அவர் கையில் கண்ணாடி குத்தி காயம் அடைந்தார்.

இது, அருண் விஜய் நடிக்கும் 30-வது படம். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பொதுவாக, சண்டை காட்சிகளில் நடிக்கும்போது கதாநாயகன் காயம் அடைந்தால், அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு நம்பிக்கை. அதன்படி, இந்த படமும் வெற்றி பெறும் என்கிறார்கள், படக்குழுவினர்!