சினிமா துளிகள்

பாலிவுட்டில் தயாராகும் கீதாகோவிந்தம் + "||" + Geetha Govindam is ready for Bollywood

பாலிவுட்டில் தயாராகும் கீதாகோவிந்தம்

பாலிவுட்டில் தயாராகும் கீதாகோவிந்தம்
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்திற்குப் பிறகு அதிரிபுதிரி வெற்றியைப் பெற்ற படம் ‘கீதா கோவிந்தம்.’
காதல், மோதல், காமெடி என்று நீளும் இந்தத் திரைப்படம் அதிக வசூலையும் பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ரோஹித் ஷெட்டி வாங்கியிருக்கிறார். 

இவர் இந்தியில் ‘சிங்கம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘சிம்பா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர். இவர் தற்போது அக்‌ஷய்குமார், கேத்ரீனா கைப் நடிப்பில் ‘சூர்யவன்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்ததும், அடுத்த படமாக ‘கீதா கோவிந்தம்’ இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.