சினிமா துளிகள்

பாலிவுட் நடிகைக்கு மரியாதை + "||" + Courtesy of Bollywood Actress

பாலிவுட் நடிகைக்கு மரியாதை

பாலிவுட் நடிகைக்கு மரியாதை
பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தற்போது மலையாள சினிமா உலகில் அதிக அளவில் வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.
மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமாங்கம்’, மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கின்றன. இதில் ‘மாமாங்கம்’ திரைப்படம் 17-ம் நூற்றாண்டில் நடைபெறுவது போன்ற கதைக்களத்தைக் கொண்டுள்ளது. இந்தப் படத்திற்கான கதையை இயக்குனர் சஞ்சீவ் பிள்ளை, 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை எம்.பத்மகுமார் இயக்குகிறார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கிய ‘ஜோசப்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் ஜோஜூ ஜார்ஜிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ‘மாமாங்கம்’ படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிப்பதற்கு அனுஷ்காவை அனுகினார்கள். ஆனால் அவர் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த காரணத்தால், ஓய்வுக்காக இந்தப் படத்தை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகையான பிராஷி தெலானை ஒப்பந்தம் செய்தனர். சமீபத்தில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மாமாங்கம்’ படத்தில் வரும் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள். வருகிற நவம்பர் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள ‘மாமாங்கம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எழுந்திருக்கிறது. இந்தப் படத்திலும் போர் காட்சிகள் இருக்கின்றன.