சினிமா துளிகள்

ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்! + "||" + actress and defenders

ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்!

ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்!
அந்த நடிகை பாதுகாவலர்களுடன்தான் படப்பிடிப்புக்கு வருகிறார்.
அந்த ஐந்தெழுத்து நாயகி தனக்கு தனது பழைய காதலர்களால் ஆபத்து நேரலாம் என்று பயப்படுகிறார். இதுபற்றி அவர் உதவியாளர்களிடம் சொல்ல-அதை உதவியாளர்கள் தயாரிப்பாளர்களிடம் சொல்ல-ஐந்தெழுத்து நடிகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பாளர்கள் செய்து இருக்கிறார்கள்.

அதன்படி, அந்த நடிகை பாதுகாவலர்களுடன்தான் படப்பிடிப்புக்கு வருகிறார். அந்த பாதுகாவலர்களுக்கு பகல் உணவை (அசைவ அயிட்டங்களுடன்) தயாரிப்பாளர் தன் செலவில் இலவசமாக வழங்குவதுடன், ஒரு வீரருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கு தினமும் ரூ.60 ஆயிரத்தை தயாரிப்பாளர்தான் கொடுக்கிறார்!