சினிமா துளிகள்

மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்த `வேதம் புதிது' தேவேந்திரன்! + "||" + Veduthu puthithu Devendran returns to Tamil film industry

மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்த `வேதம் புதிது' தேவேந்திரன்!

மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்த `வேதம் புதிது' தேவேந்திரன்!
மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது, கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, மேளம் கொட்டு தாலிகட்டு, உழைத்து வாழவேண்டும் உள்பட ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர், தேவேந்திரன்.
தமிழில் படம் இல்லாததால் இவர் கடந்த 10 வருடங் களாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பின், இவருக்கு ஒரு தமிழ் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்தின் பெயர், `பச்சை விளக்கு.' இந்த பெயரில், `நடிகர் திலகம்' சிவாஜிகணேசன் நடித்து ஒரு படம் ஏற்கனவே திரைக்கு வந்தது. இப்போது மீண்டும் `பச்சை விளக்கு' என்ற பெயரில் ஒரு புதிய படம் வருகிறது. அந்த படத்துக்கு தேவேந்திரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.