சினிமா துளிகள்

தென்னிந்திய படங்களின் சாதனை! + "||" + South Indian films record!

தென்னிந்திய படங்களின் சாதனை!

தென்னிந்திய படங்களின் சாதனை!
இப்போதெல்லாம் வட இந்திய சினிமாவுக்கு எந்த வகையிலும் குறைந்திடாத அளவுக்கு தென்னிந்திய சினிமா வளர்ந்து வருகிறது.
தரத்திலும் சரி, வசூல் சாதனையிலும் சரி, இந்தி படங்களை விட, தென்னிந்திய சினிமா தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது.  சில தென்னிந்திய படங்கள், இந்தி படங்களை விட அதிக வசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது. இதற்கு `பாகுபலி' நல்ல உதாரணம். அடுத்து, `சாஹோ' படத்தை உதாரணமாக கூறலாம்.

ரஜினிகாந்த் நடித்த `பேட்ட’, விஜய் நடித்த `பிகில்,' அஜித் நடித்த `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களும் இந்தி படங்களுக்கு சவாலாக அமைந்தன. இந்தி படங்களுக்கு இணையாகவும், அதை விட தாண்டியும் இந்த படங்கள் வசூல் செய்தன!

ஆசிரியரின் தேர்வுகள்...