சினிமா துளிகள்

சமந்தாவின் மாறுபட்ட கருத்து! + "||" + Samantha's Different Opinion!

சமந்தாவின் மாறுபட்ட கருத்து!

சமந்தாவின் மாறுபட்ட கருத்து!
ஐதராபாத்தில், ஒரு பெண் கால்நடை மருத்துவர் 4 பேரால் கற் பழித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது.
கொலைகாரர்கள் 4 பேர்களையும் ஐதராபாத் போலீசார் கைது செய்ததுடன், அவர்களை என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றார்கள். குற்றவாளிகளை உடனடியாக தண்டித்த ஐதராபாத் போலீசாரை நாடே பாராட்டியது.

குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் தங்களின் கருத்துகளை துணிச்சலுடன் வெளியிட்டார்கள். ``நடிகை நயன்தாரா, ``இது சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி’’ என்று அறிக்கை மூலம் போலீசாரை பாராட்டினார். இந்த நிலையில் நடிகை சமந்தா, ``என்கவுண்ட்டரை நான் கொண்டாட மாட்டேன். அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அல்ல’’ என்று கூறியிருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு?
நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.