சினிமா துளிகள்

யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? + "||" + Who is important to whom?

யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?

யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
‘உச்சநட்சத்திரம்’ நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு மனைவியாக இரண்டெழுத்து நடிகை, வில்லியாக மூன்றெழுத்து நடிகை, இன்னொரு மனைவியாக ‘தாரா,’ மகளாக வாரிசு நடிகை ஆகிய 4 கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள்.
“படத்தில் பழைய கதாநாயகிகள் இரண்டு பேரும், மகள் வேடத்தில் வாரிசு நடிகையும் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் ‘தாரா’ நடிகைக்கு வந்து இருக்கிறதாம். 

தனக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று டைரக்டரை அவர் வற்புறுத்தி வருகிறாராம். இதைக்கேள்விப்பட்டு மற்ற 3 கதாநாயகிகள், தங்களுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று கொடி பிடிக்கிறார்களாம். 

யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? என்றும், இவர்களின் கவுரவ பிரச்சினையை எப்படி தீர்ப்பது? என்றும் டைரக்டர் குழம்புகிறாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் படத்தில் நடிக்க மறுத்த நாயகி!
குளிர்ச்சியான நடிகையிடம் போய் ஒரு புதுமுக டைரக்டர் கதை சொன்னார். அது, சாதி வெறி மற்றும் அரசியலை கருவாக கொண்ட கதை. அதில், ‘குளிர்ச்சி’ நடிக்க மறுத்து விட்டார்.
2. ‘வாரிசு’ நடிகை புலம்பலும் டைரக்டரின் வருத்தமும்..!
உச்ச நட்சத்திரத்தின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ‘வாரிசு’ நடிகை.
3. தேன் நிலவை தள்ளிப்போட்ட நகைச்சுவை நடிகர்!
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நகைச்சுவை நடிகருக்கு மனைவியுடன் வெளிநாடுகளில் தேன்நிலவு கொண்டாட வேண்டும் என்று ஆசை.
4. ஷகிலாவுக்கு போட்டியாக மூணுஷா நடிகை!
மூணுஷா இதுவரை 60 படங்களில் நடித்து விட்டார்.
5. இளம் கதாநாயகியின் வேட்டை!
தமிழ் பட உலகின் இளம் நாயகிகளில் ஒருவரான ‘ஓ’ நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.