சினிமா துளிகள்

சண்டை காட்சிகளில் விஜயசாந்திக்கு பிறகு நந்திதா ஸ்வேதா! + "||" + In the fight scenes After the Vijayasanti Nandita Swetha

சண்டை காட்சிகளில் விஜயசாந்திக்கு பிறகு நந்திதா ஸ்வேதா!

சண்டை காட்சிகளில் விஜயசாந்திக்கு பிறகு நந்திதா ஸ்வேதா!
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது, இப்போது, ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது.
பெண்களை மையப்படுத்திய கதைகள், தமிழ் சினிமாவில் அதிகமாக வர தொடங்கியுள்ளன. அதுபோன்ற படங்களுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இது, தமிழ் சினிமாவில் நல்ல தருணமாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில், ‘ஐ.பி.சி. 376’ என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது.


இதில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ‘‘படத்தில், 4 சண்டை காட்சிகள் உள்ளன. அந்த சண்டை காட்சிகளில் நந்திதா ஸ்வேதா, ‘டூப்’ இல்லாமல் துணிச்சலாக நடித்துள்ளார். ஒரு சண்டை காட்சியை படமாக்கியபோது, அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சிரத்தை எடுத்து நடித்தார். விஜயசாந்திக்கு பிறகு சண்டை காட்சிகளில் பயப்படாமல் நடிப்பவர் நந்திதா ஸ்வேதாதான்’’ என்று டைரக்டர் ராம்குமார் சுப்பாராமன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:–

‘‘இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எஸ்.பிரபாகர் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.’’